17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பேட்டி

மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பேட்டி

எழுதியவர்: mohan October 17, 2020, 12:24 pm

தமிழக அரசின் சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரானா கட்டுபடுத்தபட்டுள்ளது, எனினும் மக்களிடையே விழிப்புணர்வு அவசியம் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமமோகன ராவ் பேட்டி.வீரபாண்டிய கட்டபொம்மன் 221வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடபட்ட இடமான கயத்தாறு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை புரிந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமமோகன்ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சுதந்திரத்திற்காக உயிர் நீத்தசுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன் 221வது நினைவு தினத்தையொட்டி அவர் தூக்கிலிடபட்ட கயத்தாறு சென்று அஞ்சலி செலுத்த செல்கிறோம்.தொடர்ந்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரானாவை கட்டுபடுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.எனினும் பொதுமக்களிடையே மிகவும் விழிப்புணர்வு அவசியம். பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!