17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெற்ற பிள்ளை களை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது

பெற்ற பிள்ளை களை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது

எழுதியவர்: mohan October 16, 2020, 5:29 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுகன்யா தனது 3 வயது பெண் குழந்தை நிஷான்கா, ஒரு வயது ஆண் குழந்தை சாய் கிருஷ்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். நாச்சியந்தேல் கிராமத்தில் உள்ள தாமரைகுளத்தில் இரண்டு குழந்தைகளையும் முழ்கடித்து கொலை செய்தார். தகவல்படி திருவாடானை தீயணைப்பு வீரர்கள் குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக சுகன்யாவை திருவாடானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!