18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் மேதகு அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் மேதகு அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

எழுதியவர்: mohan October 16, 2020, 12:21 pm

மக்கள் பாதை திண்ணை திட்டத்தின் கீழ் பெருவயல் ஊராட்சி கலையனூர் கிராமத்தில் மேதகு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தின விழா திண்ணை திட்ட பொறுப்பாளர்கள் பிரீத்தி,தேன்மொழி தலைமையில் கலையனூர் திண்ணைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் உலகு ராஜ் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் பெனடிக்ட் அதிரியான் அவர்கள் கலந்து கொண்டு திண்ணைப்பள்ளியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.திண்ணைபள்ளி நூலகத்தை விக்ரம பூபதி அவர்கள் திறந்து வைத்தார்.மேலும் மரக்கன்றுகள் நடும் விழாவும், திண்ணைப் பள்ளி குழந்தைகளின் பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார், கிளாட்வின், கலையனூர் கிராமதலைவர் சன்முகம், கலையனூர் வார்டு உறுப்பினர் வீரலெச்சுமி,மாவட்ட தமிழுக்கும் அமுதென்று பேர் திட்ட பொறுப்பாளர் மூவிந்தராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர்கள் வீரக்குமார், தினேஷ் ஆதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் இராமு,ஆசிரியர் பாதுஷா,சுரேஷ் கண்ணன் திண்ணைபள்ளி ஆசிரியர்கள் பிரியா,வீரபாரதி,வினிதா, நாகேஸ்வரி திட்ட பொறுப்பாளர்கள் பொற்செழியன் குருநாதன்,அஷ்ரப் அலி,முகேஷ், சிவராஜ் ஊராட்சி பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் மாணவ மாணவிகள்,தன்னார்வலர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!