மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கணமாய் உள்ளது. இந்த கண்மாயில் தண்ணீரை தேக்கினால் உசிலம்பட்டியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர்
தட்டுபாடு தீரும். மேலும் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றது.இக்கண்மாயை பாதுகாத்து தூர்வாரும் முயற்ச்சியில் தன்னார்வ அமைப்பிரும் சமூக ஆப்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் இணைந்து தாங்களாகவே முன்வந்து கண்மாய் கரையைச் சுற்றிலும் 15 அடி உயரமுள்ள மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சமூக ஆர்வலர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதநிலையில் 58 கிராம இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன் தலைமையில் இவர்களை ஒருக்கிணைத்து மரக்கன்றுகளை நட்டார்.இவர்களுடன் அப்துல் கலாம் அக்கினிச்சிறகுகள் அறக்கட்டளை அமைப்பினரும் இணைந்து நட்டனர்.அனைவரும் தங்கள் சொந்த வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க 200 சமூக ஆர்வலர்கள் இணைந்து தாங்களாக முன்வந்து மரக்கன்றுகளை நட்டது உசிலம்பட்டிப் பகுதியில் வித்யாசமான நிகழ்வாக கருதப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் இணைந்து உசிலம்பட்டி கண்மாய் கரை பகுதியில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் வித்யாசமான நிகழ்வு நடைபெற்றது.
எழுதியவர்: mohan October 16, 2020, 12:12 pm




You must be logged in to post a comment.