திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சையத் என்கிற கலிமுல்லா. இவர் தனது ஆட்டோவில் நூதன முறையில் சாராயம் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் சாராய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடுத்தனர். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கலிமுல்லாவை நகர போலீசார் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடியில் ஆட்டோவில் நூதன முறையில் சாராயம் விற்றஓட்டுனர் கைது.
எழுதியவர்: mohan October 16, 2020, 11:07 am




You must be logged in to post a comment.