17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு..

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு..

எழுதியவர்: mohan October 16, 2020, 11:03 am

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.நெல்லை மாநகரம் குன்னத்தூரை சேர்ந்த தங்கராஜ் மகன் பெருமாள் என்பவர் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த, டவுன் மகளிர் காவல் துறையினர், குற்றவாளியான பெருமாளை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்கள்.இவ்வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை 15-10-2020-ம் தேதியன்று, விசாரித்த நெல்லை போக்சோ நீதிமன்ற நீதிபதி. இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட பெருமாளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.2,25,000/- அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, மற்றும் வழக்கை உரிய முறையில் விசாரித்து தண்டனை பெற்றுக் கொடுத்த நெல்லை டவுன் காவல் அதிகாரிகள் ஆகியோரை பாராட்டி சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!