17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் பல திட்ட பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

நெல்லையில் பல திட்ட பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

எழுதியவர்: mohan October 16, 2020, 10:58 am

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் அங்கன்வாடி மையம், கூனியூரில் அங்கன்வாடி மையம், மூலச்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் பேருந்து நிறுத்தமும், மேலும் அம்பாசமுத்திரம் நகராட்சி பகுதியில் ராணி ஸ்கூல் அருகே பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் மற்றும் உயர் கோபுர மின் விளக்கு, மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரேஷன் கடை பாபநாசம் தலையணையில் ரோடு, பாபநாசம் கோவில் முன்பு பிளேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்பு செயலாளருமான முருகையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார் சேரன்மகாதேவி தாசில்தார் வெற்றிச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சரவணன், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய செல்வி, முத்துகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, உதவி செயற்பொறியாளர் சுகந்தி, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர், கூனியூர் ஊராட்சி செயலாளர் சிவன் பாண்டி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!