18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் அண்ணா பல்கலை. மண்டல அலுவலக முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் அண்ணா பல்கலை. மண்டல அலுவலக முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan October 15, 2020, 4:45 pm

திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதல் படியும், மதுரை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில்,அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசு உரிமையிலிருந்து நீக்கி யதைக் கண்டித்து மதுரை கீழக்குயில் குடியில் அமைந்திருக்கும் மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் முன்பு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் எம்எல்ஏ தலைமையில் தெற்கு மாவட்ட இளைஞரணி ராஜா உட்பட ஏராளமான திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய மாநில அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!