18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்- பரபரப்பு..

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்- பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 15, 2020, 10:21 am

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கார்த்தி, விக்கி ஆகியோர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் 16.10. 2018ல் ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு டிஐஜி அலுவலகம் பகுதியில் வந்தபோது பெட்ரோல் குண்டு வீசி இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இக்கொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை (16.10.2020) வருவதையொட்டி பழிக்குப் பழி வாங்க வாலாந்தரவையில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் துணையுடன் வாலாந்தரவைக்கு நேற்று (14/10/2020) நள்ளிரவு சென்றனர். சுரேஷ் என்பவர் தோப்பில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். இது தொடர்பாக 2018ல் கொலை செய்யப்பட்ட கார்த்தி அண்ணன் தர்மராஜ் மற்றொரு தரப்பைச் சேர்ந்த பூமிநாதன், சுரேஷ் ஆகியோரிடம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் நிலவும் வாலாந்தரவையில் பரபரப்பு நிலவியதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!