திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துத்திப்பட்டு சுடுகாட்டு பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் இவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சைபுல்லா என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை உமராபாத் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது. 2கிலோ கஞ்சா பறிமுதல்.
எழுதியவர்: mohan October 14, 2020, 6:24 pm




You must be logged in to post a comment.