17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் போக்குவரத்து நெரிசல்

மதுரையில் போக்குவரத்து நெரிசல்

எழுதியவர்: mohan October 14, 2020, 11:16 am

மதுரை கோரிப்பாளையத்தில் மின்கம்பிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ள பெரிய மரக்கிளைகள் மின்வாரிய ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கிளைகளை அப்படியே சாலையில் போட்டு விட்டு சென்றதால் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் கல்பாலத்தில் இருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை வரை கடுமையாக இருந்தது. பணிக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் நெரிசலுக்குள் சிக்கி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் தகவல் கிடைத்து விரைந்து வந்து பார்வையிட்டனர். அருகில் மரக்கடைகளிலிருந்து மரம் அறுக்கும் கருவிகளை கொண்டுவந்து துண்டு துண்டுகளாக அறுத்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பஸ் ஏற காத்திருந்த பயணிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சரி செய்த தல்லாகுளம் போக்குவரத்து போலீசாரை பாராட்டினர். மின்சார ஊழியர்கள் இதுபோன்று இடையூறாக உள்ள மரம் கிளைகளை அகற்றும் போது வெட்டப்பட்ட மரக்கிளைகளை அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்வதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!