17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் நோய்வாய்பட்ட யானைக்கு உரிய சிகிச்சையளிக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

நெல்லையில் நோய்வாய்பட்ட யானைக்கு உரிய சிகிச்சையளிக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

எழுதியவர்: mohan October 13, 2020, 6:01 pm

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மலை பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காட்டு யானையை குணப்படுத்தி காட்டுக்குள் விட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராம மலை அடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் அருகில் காட்டு யானை ஒன்று கடந்த ஒரு காலமாக அந்த கால்வாய் பகுதியில் கண்களில் நீர் வழிந்தபடி நிற்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.மேலும் அந்த யானை மற்ற யானைகளை போல் வேகமாக நடக்க முடியாமல் சோர்ந்து படுத்து விடுவதாகவும், நோய் வாய்ப்பட்ட யானை போன்று இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர்பாதிக்கப்பட்ட யானைக்கு உரிய சிகிச்சை அளித்து காட்டுக்குள் விரட்டி விட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!