17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

நிலக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

எழுதியவர்: mohan October 13, 2020, 10:26 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் தேசியா வயது 18. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஆண்டி மகன் பாலமுருகன் வயது 22. இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் பேசி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று ( 12.10.2020 ) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேசியா வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையை மாற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ராஜலட்சுமி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலையிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமாகி 5 மாதம் என்பதால் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையிலும் ,நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் முன்னிலையிலும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமாகி 5 மாதத்தில் இளம்பெண் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!