18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி கரிகிரியில் 65 நரிக்குறவ இனத்தவருக்கு பசுமை வீடுகள் ஆட்சியர் துவக்கினார்.

காட்பாடி கரிகிரியில் 65 நரிக்குறவ இனத்தவருக்கு பசுமை வீடுகள் ஆட்சியர் துவக்கினார்.

எழுதியவர்: mohan October 12, 2020, 3:07 pm

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா கரிகிரி கிராமத்தில் பல ஆண்டுகளாக நரிக்குற இன மக்கள் 65 குடும்பங்கள் குடிசை போட்டு வசித்து வந்தனர. இவர்கள் சொந்தமாக இடம் கேட்டு அரசுக்கு விண்ணப்பம் செய்தனர். வட்டாட்சியர் பாலமுருகன் ஏற்பாட்டில் இலவசமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த குடும்பங்களுக்கு இன்று 10-ம் தேதி அரசின் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாலமுருகன் சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!