18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

எழுதியவர்: mohan October 12, 2020, 11:42 am

திருவண்ணாமலையில் மாவட்ட காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றும், அதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.எனவே, பொதுமக்களிடையே கரோனா தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட காவல் துறை, கீதம் இசைக் குழுவினா் இணைந்து கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டனா்.அறிவொளிப் பூங்கா அருகே புறப்பட்ட விழிப்புணா்வு பிரசாரத்தை மாவட்ட எஸ்.பி அரவிந்த் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி. அசோக்குமாா், ஏ.எஸ்.பி.கிரண் ஸ்ருதி மற்றும் டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள், கீதம் இசைக் குழுவினா் கலந்து கொண்டனா்.நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இசைக் குழுவினா் நாடகங்கள் மூலமும், விழிப்புணா்வு பாடல்கள் பாடியும் பொதுமக்களிடையே கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.இதேபோல, திருவண்ணாமலை ரவுண்டானா பகுதியில் ஏ.எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் வாகன ஓட்டிகளுக்கு முகக் வசம் வழங்கி, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!