17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில்கொசு வலை

மண்டபம் மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில்கொசு வலை

எழுதியவர்: mohan October 12, 2020, 10:48 am

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மலேரியா தடுப்பு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் மலேரியா பாதிப்பு மற்றும் அறிகுறி தென்படும் பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் கொசு வலை வழங்க மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டார். இதன்படி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் கொசு வலைகள் ஒப்படைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டபம் பேரூராட்சியில் கொசு வலை விநியோகத்தை ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம்.செந்தில்குமார் அறிவுறுத்தல் படி மாவட்ட பூச்சியியல் வல்லுநர் பி.உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுரேந்திரன், இளநிலை பூச்சியியல் வல்லுநர் எம்.வேலாயுதம், சுகாதார ஆய்வாளர்கள் எம்.பாலசுப்ரமணியன் (ராமேஸ்வரம்), மெய்.ராமச்சந்திரன் (மண்டபம்) மற்றும் டெங்கு, மலேரியா தடுப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!