18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. ஆனால் பாதுகாப்பு “ஸ்மார்ட்” ஆக இல்லை.. தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த பெண்…

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்.. ஆனால் பாதுகாப்பு “ஸ்மார்ட்” ஆக இல்லை.. தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் தவறி விழுந்த பெண்…

எழுதியவர்: ஆசிரியர் October 9, 2020, 9:18 pm

மதுரை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு, முறையான பாதுகாப்பு அடையாளங்கள் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் மதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திட்ட பணிகள் உரிய பாதுகாப்பு வசதி எதுவும் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை டவுன்ஹால் ரோடு பகுதியில் பெண் ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் தவறி விழுந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் துரிதமாக மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  உடனடியாக ஒப்பந்ததாரர்கள் முறையான தடுப்பு குழு ஏற்படுத்தப்பட்டு பள்ளங்களில் உள்ள பகுதியை பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!