17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருநகர் அருகே விநாயகர் கோவிலில் போதையில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

மதுரை திருநகர் அருகே விநாயகர் கோவிலில் போதையில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

எழுதியவர்: mohan October 8, 2020, 11:18 am

மதுரை திருநகர் அருகே சுந்தரம் நகரிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோவிலில் இன்று காலையில் கோவில் பூசாரி கோவிலை திறந்து பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியல் சேதமடைந்த நிலையிலும், கோவில் வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருநகர் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்ட பின்னர் அருகிலுள்ள cctv காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை நேற்று இரவு குடிபோதையில் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் உண்டியல் திருட முற்பட்டதும், முடியாதாதால் அங்கிருந்த பித்தளை பாத்திரங்கள் மற்றும் உலோக பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும்,தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்ததால் வேறு ஏதேனும் பொருட்கள் கொள்ளையடிக்க பட்டுள்ளதா அல்லது கோவிலில் உள்ள சிலையை கடத்த முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!