18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் விளை நிலத்தில் சாய்ந்துள்ள 10க்கும் மேற்ப்பட்ட மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

உசிலம்பட்டி அருகே உ.புதுக்கோட்டை கிராமத்தில் விளை நிலத்தில் சாய்ந்துள்ள 10க்கும் மேற்ப்பட்ட மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan October 8, 2020, 11:06 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது. இனிவரும் காலங்கள் மழைகாலம் என்பதால் எந்த நேரமும் சாய்ந்துள்ள மின்கம்பங்கள் விளை நிலங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் விவசாய நிலங்களில் மினவயர்களும் கைகளால் தொடும் அளவிற்கு தாழ்வான பகுதியில் செல்வதால் உயிhப்;பலி வாங்க காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தபட்ட மின்சாரவாரியத்தில் விவசாயிகள் பலமுறை சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் இதுவரை சரிசெய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். உடனே சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகம் பெரும் உயிர்ப்பலி ஏற்படும் முன் சாய்ந்துள்ள மின்கம்பங்களையும், தாழ்வான பகுதியில் செல்லும் மின்வயர்களையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!