18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அருகே நகரும் நியாய விலைக் கடை; தென்காசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

சுரண்டை அருகே நகரும் நியாய விலைக் கடை; தென்காசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

எழுதியவர்: mohan October 7, 2020, 10:20 am

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தாயார்தோப்பில் வீரகேரளம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் அம்மா நடமாடும் நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இக்கடையினை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன், ஒன்றிய செயலர் அமல்ராஜ், அதிமுக நிர்வாகிகள்  எபன் குணசீலன், கணபதி, பாஸ்கர், இருளப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக எம்எல்ஏவுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!