18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செஞ்சிலுவை சங்கத்திற்கு கொரோனா பரவல் தடுப்பு கருவி அளிப்பு

செஞ்சிலுவை சங்கத்திற்கு கொரோனா பரவல் தடுப்பு கருவி அளிப்பு

எழுதியவர்: mohan October 6, 2020, 2:33 pm

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், செங்கத்தில் செஞ்சிலுவை சங்கத்திற்கு கொரோனா பரவல் தடுப்பு கருவி வழங்கப்பட்டன.தங்கம் அடுத்த நாச்சி பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் செங்கம் வட்டத் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். ரெட் கிராஸ் செயலா் தனஞ்செயன் முன்னிலை வகித்தாா்.பொருளாளா் ஆதவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில்சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் இந்திரராஜன் கலந்து கொண்டு, பொதுப் பயன்பாட்டுக்கு கொரோனா பரிசோதனைக் கருவிகளான வெப்பமானி கருவி, ரத்தத்தில் ஆக்சிஜன் பார்க்கும் கருவி ஆவி பிடிக்கும் மிஷின், தெர்மாமீட்டர், ஆக்சி மீட்டர் ஆகியவை வழங்கி, செயல்விளக்கம் அளித்தாா். பின்னர் மாவட்ட தலைவர் இந்திரா ராஜன் , வட்டாட்சியர் வெங்கடேசன் அவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்தார்.நிகழ்ச்சியில், வட்டாட்சியர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார் ரெட் கிராஸ் சங்க நிா்வாகிகள் சா்தாா் ரூஹுல்லா, வழக்குரைஞா் செல்வம், அழகப்பன், ராதாகிருஷ்ணன், அசோக்குமார், சரவணகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!