18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் 15 கிராமங்களில் அம்மா நகரும் நியாய விலை கடையைத் தொடங்கி வைத்து எம். எல். ஏ.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் 15 கிராமங்களில் அம்மா நகரும் நியாய விலை கடையைத் தொடங்கி வைத்து எம். எல். ஏ.

எழுதியவர்: mohan October 5, 2020, 12:09 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள நிலக்கோட்டை ஒன்றியத்தில் மைக்கேல் பாளையம், ராயப்பன்பட்டி, சுட்டிகாலாடிபட்டி, சோமபுரம் , கோட்டூர், கொக்குபட்டி, புதுக்கோட்டை,கொங்கர்குளம், துரைச்சாமிபுரம், காமாட்சிபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான அம்மா நகரும் நியாயவிலைக்கடை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, நிலக்கோட்டை அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன், கோடாங்கி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, திண்டுக்கல் அ.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ராஜதுரை, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஊராட்சி செயலாளர்கள் பாண்டியராஜன் , ஜெய்கணேஷ், முத்துக்குமார் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர்கள் பொன்முருகன், மகாமுனி தகவல் தொழில்நுட்ப ஒன்றிய பொறுப்பாளர் குமரேசன் கொங்குபட்டி கனிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!