17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததால் ஒரே பரபரப்பு தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர்

சோழவந்தான் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததால் ஒரே பரபரப்பு தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர்

எழுதியவர்: mohan October 4, 2020, 3:22 pm

சோழவந்தான் கடைவீதியில் பிரபல ஓட்டலில் பணிபுரியும் குமார் என்பவர் தனது ஸ்கூட்டரை ஹோட்டல் முன்பாக நிறுத்தி இருந்தார் அதில் பாம்பு இருப்பதாக தெரிந்து அங்கு உள்ள பணியாளர்கள் பாம்பை பிடிக்க முயற்சித்தனர் பாம்பை பிடிக்க முடியாததால் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் இதன்பேரில் நிலை அலுவலர் ஸ்ரீனிவாசன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்கூட்டரில் உள்ள பாம்பை பிடிப்பதற்கு ஒரு மணி நேரம் போராடினார்கள் பின்னர் பாம்பை பிடித்து அருகில் உள்ள மலையில் விட்டனர் கடைவீதி என்பதால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!