18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் தி.மலை ரமணாஸ்ரமத்தில் மரக்கன்று நடும் விழா

பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் தி.மலை ரமணாஸ்ரமத்தில் மரக்கன்று நடும் விழா

எழுதியவர்: mohan October 2, 2020, 10:50 am

திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். பாரத சாரண இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் அனைவரையும் வரவேற்று பேசினார். ரமணாஸ்ரமத்தில் தலைவர் மணி, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் வேத பிரகாசம், பள்ளி கல்வி துறை ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பாரத சாரணர் இயக்கத்தின் மாநில செயலாளர் அறிவுரையின்படி மரம் நடுதல் விழா திருவண்ணாமலை மாவட்ட சாரண சாரணிய ஆசிரியர்கள் ரமணாஸ்ரமத்தில் முக்கியமான இடத்தில் பெரிய மரக்கன்றுகளை நட்டனர் மற்றும் 150 மரக்கன்றுகள் ரமணா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.அனைத்தும் பலவகையான மருத்துவ வகையான செடிகள் வழங்கப்பட்டது மற்றும் 1000 விதைப்பந்துகள் ரமணா ஆசிரமத்தில் உள்ள கந்தாஸ்ரமம் அனைவரும் ஏறிச் சென்று விதைப்பந்துகள் வீசினர். மலைவாழ் மக்களுக்கும் அளித்து பந்தை வீசப்பட்டது.செங்கம் கல்வி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் குழுவுடன் படையுடன் வந்து பங்களித்தனர். திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் மட்டும் மாவட்ட செயலர் பியூலா கரோலின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார். திருவண்ணாமலை, போளூர், செங்கம் சாரண சாரணிய ஆசிரியர்கள், பாலகுமார், கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி, குப்புசாமி, அருண் 50க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வானது சமூக இடைவெளியை கடைபிடித்து நடைபெற்றது.திருவண்ணாமலை அமைப்பு ஆணையர் அருண்குமார் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!