17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்த நீதித்துறையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விடுதலை செய்த நீதித்துறையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan October 2, 2020, 10:42 am

பாபர் மசூதி இடித்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரையில் இருவேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக பாபர் மசூதி 1992-ல் இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர், ஜோஷி உமாபாரதி,உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என லக்னோ நகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

.இதன் தொடர்ச்சியாக பல்வேறு இஸ்லாமிய கட்சியினர் முற்போக்கு கட்சியினர் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை மாவட்ட நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மதுரை தெற்கு வாசல் பகுதியில் தெற்கு மாவட்ட தமுமுக அமைப்பினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வலுவான ஆதாரங்களை சிபிஐ வலுவற்றதாக ஆக்கி குற்றவாளிகளை காப்பாற்றி உள்ளது எனவே பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் விடுதலை செய்த நீதித் துறையை கண்டித்து மதுரை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!