17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் கொடிய விஷப்பாம்புகள் வளர்வதால் முட்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள் கொடிய விஷப்பாம்புகள் வளர்வதால் முட்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….

எழுதியவர்: mohan October 2, 2020, 10:34 am

மதுரை மாநகராட்சிக்கு பைபாஸ் சாலை உட்பட்ட 19-ஆவது வார்டு மீனாட்சி நகர் 1வது தெரு திருவள்ளுவர் நகர் அபிஜித் குடியிருப்பு வளாகம் எல்லையை உள்ளடக்கிய பகுதியில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு கோவிலுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் உள்ளது பல ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் இருந்து மீனாட்சி அம்மனுக்கு பூக்கள் எடுத்து செல்லப்பட்டு தொடங்கப்பட்ட அம்மனுக்கு சாத்தப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் தற்பொழுது அப்பகுதி முழுவதும் சீமைக்கருவேல முள் களாக காணப்படுகிறது அதிக குடியிருப்பு பகுதியான இப்பகுதியில் அடிக்கடி அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகள் வீட்டுக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் மேலும் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் இதை பாதுகாக்கும் நடவடிக்கையில் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும் எனவும் சீம கருவேல முள் மரங்களை அகற்றிவிட்டு பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!