17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராகுல்காந்தி மீது தாக்குதல்;யோகியின் உருவபொம்மையை எரித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் போராட்டம்…

ராகுல்காந்தி மீது தாக்குதல்;யோகியின் உருவபொம்மையை எரித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் போராட்டம்…

எழுதியவர்: mohan October 2, 2020, 10:12 am

உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்படதை கண்டித்து நேற்று பகலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற போது போலீசாரால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் சுரண்டை அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர தலைவர் எஸ்கேடி ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் பால் எ சண்முகவேல், மேலநீலிதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, மோகன், நாட்டாண்மை ராமராஜ், தெய்வேந்திரன், சோனியா பேரவை பிரபு, ‌‌‌முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசலக்கனி, செல்வன், மணிகண்டன்,  சமுத்திரம், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா, கந்தையா, பங்களா சுரண்டை செல்வராஜ், கீழச்சுரண்டை ராமகிருஷ்ணன், சமுத்திரகனி, ஆதி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், ராகுல்காந்தி போலீசாரால் தடுக்கப்பட்டு தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யா உருவபொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!