திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின் பஜாரில் மறைந்த இந்து முன்னணி தலைவரும் நிறுவனமான ராமகோபாலன்
இறந்ததைத் தொடர்ந்து அஞ்சலி மற்றும் ஊர்வலத்திற்கு வத்தலக்குண்டு போலீசார் தடை செய்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வேறு ஒரு இயக்கத்திற்கு அனுமதி அளித்தும். உரிய பாதுகாப்பு கொடுத்ததை கண்டித்தும், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் உருவப்படத்தை அவமரியாதை செய்த இயக்கத்தினரை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் நிலக்கோட்டை நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதையறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த சாலை மறியலால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியல்
எழுதியவர்: mohan October 2, 2020, 9:58 am




You must be logged in to post a comment.