18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்பை கண்டித்து.. கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்பை கண்டித்து.. கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2020, 12:09 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட அத்துணை குற்றவாளிகளையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதை கண்டித்து கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் நகர சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் இணைச் செயலாளர் தாஜூல் அமீன் வரவேற்புரையுடன் தொகுதி துணைத் தலைவர் நூருல் ஜமான் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர், நகர தலைவர் ஹமீது பைசல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது உசேன் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பாப்புலர் பிராண்ட் நிர்வாகிகள் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!