18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் மமக போராட்ட அறிவிப்பு. சுவரொட்டியால் பரபரப்பு…

நெல்லையில் மமக போராட்ட அறிவிப்பு. சுவரொட்டியால் பரபரப்பு…

எழுதியவர்: mohan September 26, 2020, 10:46 am

நெல்லையில் மமக-வினரால் ஒட்டப்பட்ட போராட்ட அறிவிப்பு சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் 29-வது வார்டு பாத்திமா நகர்,ஹபிப் நகர் பகுதிகளுக்கு தெரு விளக்குகள், கழிவுநீர் ஓடை வசதி ஏற்படுத்திக் தர கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் கோரிக்கையை நிறைவேற்றி தர தாமதிக்கும் மாநகராட்சியை கண்டித்து மமக சார்பில் போராட்ட அறிவிப்பு சுவரொட்டிகள் மேலப்பாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் 25.09.2020 காலை மேற்கண்ட பகுதிக்கு வருகை தந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் தெரு விளக்குகள், கழிவுநீர் ஓடைகள் வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அப்போது அவர்களுடன் மமக மாவட்ட ஊடக அணி பொருளாளர் B.செய்யது அப்துல் காதர்,29- வது வார்டு மமக தலைவர் ஹூசைன், செயலாளர் ஆட்டோ கரிம் பொருளாளர் அசன், பாத்திமா நகர் மற்றும் ஹபீப் நகர் ஒருங்கிணைந்த ஜமாத் துணைத்தலைவர் MMAK நியாஸ் அலி, செயலாளர் அபூபக்கர், பொருளாளர் நெய்னா முகம்மது மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் முபாரக் அலி, முகம்மது அலி ,இலியாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!