17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசின் அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு. பழனி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு. பழனி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

எழுதியவர்: mohan September 26, 2020, 10:02 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி, எஸ் மேட்டுப்பட்டி,, குண்டலபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற மாயன் தனது சொந்தத் செலவில் 2200 குடும்பத்தாருக்கு  வீடுகளுக்கும் இலவசமாக 5 கிலோ அரிசியும், மற்றும் காய்கறிகளுடன் கூடிய பை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளரும் (கிழக்கு ), பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி . செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அரிசியுடன் கூடிய பையை வழங்கிப் சிறப்புரை   ஆற்றிய பேசியதாவது; இன்றைய சூழ்நிலையில் உடல்ரீதியாக பழனி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு சில குறைபாடுகள் ஏற்பட்டது என்னமோ உண்மைதான்.

தற்போது உடல் நிலை நன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு அதன் காரணமாக பொதுமக்களுக்கு வழங்க கூடிய பல்வேறு நலத்திட்டங்களை திமுக சார்பில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்கும் விதமாக  திண்டுக்கல் மாவட்டத்திலேயே அணைப் பட்டியில் முதல் நிகழ்ச்சியாக பொது மக்களுக்கு அரிசி வழங்கும் விழாவை தொடங்கி வைக்கும் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வு மற்றும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி  சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது என்பதே பொதுமக்களுக்கு தெரியாதது இல்லை. அப்படிப்பட்ட பா. ஜ. க அரசு தற்போது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்க்கக்கூடிய விவசாயத்திற்கு எதிரான ஒரு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரானவை. இந்த மசோதாவை நிறைவேற்றியது எதை எடுத்துக்காட்டுகிறது என எண்ணிப் பார்த்தால் சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மக்கள் எப்படி ஆங்கிலேயர்களிடம் அடிமையாய் இருந்தார்களோ அதே போன்று கார்ப்பரேட்டுகளின் அடிமை படுத்துவதற்கான திட்டமாகவே இந்த திட்டத்தை நாங்கள் அனைவரும் கருதுகிறோம். எனவே பொது மக்களையும், விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளின் அடிமையாக கொண்டுவருவதற்காக தான் மத்திய அரசும், மாநில அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் , இந்தத் திட்டங்களை வரவேற்கக் கூடிய அதிமுக அரசு மத்திய அரசின் அடிமையாக செயல்படுகிறது என்பதை இந்தத் தருணத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் குற்றம் சாட்டுகிறேன் என்றும் இதுபோன்ற திட்டங்களை முறியடிக்க வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் கொண்டு வருவதற்கு ஆதரவு தருமாறு இந்தக் கூட்டத்தின் வாயிலாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ . பி. செந்தில்குமார் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன், நிலக்கோட்டை நகர செயலாளர் கதிரேசன், ஒன்றிய பொருளாளர்  காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற மாயன், ஒன்றிய இளைஞரணி முத்துராஜ் மாணவர்அணி முத்துவேல் சிவஞானபுரம் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!