17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் போராட்டம்

செங்கத்தில் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் போராட்டம்

எழுதியவர்: mohan September 25, 2020, 7:48 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் காமராஜ், மாவட்ட குழு ராஜா ,மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வேளாண் விளைபொருள் ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், இந்த சட்டத்தை அமல்படுத்தினால் விவசாயிகளுக்கு , மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இந்திய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இந்த மூன்று சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோஷமிட்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சர்தார், வட்டார செயலாளர் லட்சுமணன், சிறுபான்மைக் குழு அப்துல் மஜீத் மாவட்ட பொது செயலாளர் மாதேஸ்வரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கண்டன உரை நிகழ்த்தினார்.செங்கம் புதிய பேருந்து நிலையம் இருந்து பேரணியாகச் சென்றனர் பின்னர் தனியார் மண்டபத்தில் செங்கம் காவல்துறையினர் 40க்கும் மேற்பட்ட கட்சியினரை சிறை வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!