17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மது அருந்த பணம் இல்லாததால் கட்டுமான பணி நடைபெறும் காவல் ஆய்வாளர் வீட்டில் இரும்பு தகடுகளை திருடிய வாலிபர் கைது

மதுரையில் மது அருந்த பணம் இல்லாததால் கட்டுமான பணி நடைபெறும் காவல் ஆய்வாளர் வீட்டில் இரும்பு தகடுகளை திருடிய வாலிபர் கைது

எழுதியவர்: mohan September 24, 2020, 4:23 pm

மதுரை மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் இரண்டாவது தெரு பகுதியில் சிபிசிஐடி காவல் ஆய்வாளராக பணியாற்றக்கூடிய மாதவன் என்பவருக்கு பொதும்பு பகுதியை சேர்ந்த திரவியம் பில்டிங் காண்ட்ராக்டர் ஆக பணி செய்து வருகிறார்.இந்த நிலையில் கட்டுமான பணியின் போது அங்கு அடுக்கி வைத்திருந்த இரும்பு தகடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக திரவியம்  S. S.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போதுஅதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற வாலிபர் திருடிச் சென்றது தெரியவந்தது.குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் மது அருந்த பணம் இல்லாத காரணத்தால் இரும்பு தகடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.மேலும் திருடப்பட்ட இரும்புத் தகடுகளை காவல்துறையினர் மீட்டனர்.24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை போலீசார் காவல் துறையினரின் இந்த செயல் பாராட்டுக்குரிய தாக இருந்தாலும்மறுபுறம் காவல்துறையினரின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய இந்த குடிகாரனின் செயல் என்னவென்று சொல்லுவது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!