18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை சதக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா.

கீழக்கரை சதக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா.

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2017, 6:50 pm

கீழக்கரை சதக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட விழா கல்லூரி புதிய கருத்தரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் வரவேற்புரையை நலப்பணித் திட்ட அலுவலர் இராஜேஸ்கண்ணா வழங்கினார்.  கல்லுரியின் துணை முதல்வர் சேக்தாவுது நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழத்துரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஹமீதா கலைக் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் பற்றிய தலைப்பில் அறிவுரைகள் வழங்கினார்.  பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கமலநாதன் இலக்கு நிர்ணயித்தல் மற்றும் அதன் சார்ந்த தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள் செல்வநாதன் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் இவ்விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வேல்முருகன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்காக தென்மாவட்டங்களில் இருந்து 100 மாணவர்களும் நாட்டு நலதிட்ட பணியாளர்களும் பல்வேறு பாலிடெக்னிக்களில் இருந்து கலந்து கொண்டார்கள்.  மேலும் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.   இந்நிகழ்வின் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் இராஜேஸ்கண்ணா வேல்முருகன் மற்றும் உடற்கல்வித்துறை இயக்குனர் மருதாசல மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!