18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இயற்கை முறையில் கொரோனா சிகிச்சை- மருத்துவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

இயற்கை முறையில் கொரோனா சிகிச்சை- மருத்துவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

எழுதியவர்: mohan September 24, 2020, 3:52 pm

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை முறையில் சிகிச்சையளித்த மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் பாராட்டியுள்ளார்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் எஸ். தங்கபழம் பாலிடெக்னிக் கல்லூரியில், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஜூலை 7 முதல் செப்டம்பர் 20-ந்தேதி வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 1426 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை முறையிலான சிகிச்சை அளித்து குணமடையச் செய்துள்ளனர்.

இயற்கை மருத்துவத்தின் மூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தமைக்காக இந்த பணிகளில் ஈடுபட்ட மருத்துவர்கள், அவரோடு பணிபுரிந்த அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர், மற்றும் கல்லூரி முதுகலை மருத்துவர்கள், இளநிலை மருத்துவர்கள், யோகா மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சௌந்தர பாண்டியன் ஆகியோரை மாவட்ட கலெக்டர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் பாராட்டினார்.இவர்கள் கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்.மேலும் கலெக்டரிடம் கொரோனா மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட யோகா மற்றம் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள் ஆகியவற்றின் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தினை வழங்கினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!