18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அணைப்பட்டி வைகை ஆற்றில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

அணைப்பட்டி வைகை ஆற்றில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

எழுதியவர்: mohan September 23, 2020, 3:50 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அனைப்பட்டி பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் செல்லவும் வைகை ஆற்றுப்படுகையில் பொதுமக்கள் திதி செலுத்துவதற்கும் மற்றும் பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தும்போது பழைய துணிகளை அங்கேயே பொதுமக்கள் அப்படியே விட்டுவிட்டு விடுவதாலும், ஆங்காங்கே பழை ய துணிகளும் ஏராளமான குப்பைகளாக தேங்கி கிடந்தது. இந்த குப்பைகளை பிள்ளையார்நத்தம், சித்தர்கள்நத்தம் , எஸ் மேட்டுப்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சிவஞானபுரம் உள்ளிட்ட ஊராட்சி உள்ளத் தூய்மை காவலர்களை வைத்து நேற்று குப்பைகளை ஒன்றாக சேகரித்த வைகை ஆற்றுப்படுகையை சுத்தம் செய்தனர்.இந்தப்பணியில் ஊராட்சிமன்ற தலைவர்கள் டாக்டர்.வைகைபாலன், முத்துலட்சுமிமுத்தையா,முனிராஜா, தீபா, பாப்பாத்தி அம்மாள் ஆகியோர்கள் தலைமையில் துப்புரவுப் பணி நடைபெற்றது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!