17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்ம முத்தன்பட்டியில் தேர்தல் முன்விரோதத்தால் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள். ஒன்றிய கவுன்சிலர் பேச்சுவார்த்தை

அம்ம முத்தன்பட்டியில் தேர்தல் முன்விரோதத்தால் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள். ஒன்றிய கவுன்சிலர் பேச்சுவார்த்தை

எழுதியவர்: mohan September 20, 2020, 11:09 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு கூட்டுகுடிநீர் திட்ட குழாய் மூலம் குடிநீர் வழங்கபட்டு வந்த நிலையில் கடந்த 1மாதமாக குடிநீர் நிறுத்தபட்டது.இப்பகுதி மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தாகவும் இதனால் அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் கூட்டுக்குடிநீர் பணியாற்றுபவர் வேண்டுமென்றே இக்கிராமத்திற்கு குடிநீர் வழங்காமல் புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரிடம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால்; கடந்த 1மாதமாக குடிநீர் கிடைக்காத நிலையில் கிராம மக்கள் ஒன்றினைந்து உசிலம்பட்டி எழுமலை சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது தகவலறிந்த அமமுகவைச் சேர்ந்த அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர் மலேசியாபாண்டி கிராமமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கபடுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கநை;து சென்றனர்.தேர்தல் முன் விரோத்ததால் கிராமத்திற்கே குடிநீர் வழங்க மறுப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!