18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

செங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

எழுதியவர்: mohan September 19, 2020, 7:45 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 16ம் ஆண்டு துவக்கவிழா புதிய குயிலம் கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்குஒன்றிய செயலாளர் ஜே.சி.பி.சங்கர்தலைமை தாங்கினார்.அவைத்தலைவர் தின பிரபு ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கடகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு குயிலம் சிவா அனைவரையும் வரவேற்று பேசினார்.செங்கம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் வி.எம்.நேரு நேருவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் வி.எம்.நேரு மாரியம்மன் கோவிலை சுற்றி 16 மரக்கன்று நட்டு கழக கொடி ஏற்றிவைத்து 5 கிலோ எடையுள்ள கேக் வெட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்குதுணைச் செயலாளர் சக்திவேல் ,குயிலம் நிர்வாகிகள்ஜெமினி ,கோபி ,செல்வம். ராமச்சந்திரன், மஞ்சுநாத், சூர்யா..நிகழ்ச்சியின் முடிவில் வி.கே சரண்ராஜ் நன்றி கூறினார்.

செய்தியாளர் , செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!