17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..

கீழக்கரை நகராட்சி அலுவலகமா?? இல்லை நாய்களின் கூடாரமா….வீடியோ காட்சிகள்..

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2020, 7:42 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் நகராட்சி அலுவலகத்திலேயே கூடாரம் இட்டு அப்பகுதியில் வரும் பொது மக்களை அச்சுறுத்த செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்து கீழக்கரையை சேர்ந்த பச்சிளம் பாலகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் கீழக்கரை பகுதி முழுவதும் அதிக அளவில் குறிப்பாக நோயுற்ற நாய்கள் வீதிவீதியாக சுற்றி திரிகிறது இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நாய்களை பிடிக்குமாறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!