18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ! செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.!

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ! செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.!

எழுதியவர்: Askar September 12, 2020, 9:22 pm

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஹவுசிங் போர்டு அருகில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். போட்டிக்கு சமூக ஆர்வலர் குருபரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.கிரிக்கெட் போட்டிக்கு 50க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொண்டது.
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில்,
கொரோனா வைரஸ் எனும் கொடிய நோயிலிருந்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அனைவரும் பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
கிரிக்கெட் போட்டியில் தோக்கவாடி தமிழ்நாடு கணக்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் முதல் பரிசு வழங்கினார். இரண்டாவது பரிசு திருவடத்தனூர் அணிக்கு சமூக ஆர்வலர் குருபரன் வழங்கினார் மூன்றாவது பரிசாக ஜவ்வாது மலை அனைத்து வழக்கறிஞர் செல்வம் வழங்கினார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் போட்டிகள் நடத்தி வீரர்களை தேர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!