18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள்-தென்காசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்..

சுரண்டை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள்-தென்காசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்..

எழுதியவர்: mohan September 12, 2020, 4:15 pm

சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் ரூ.13 லட்சம் செலவில் புதிய கட்டிடங்களை தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன் தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குலையநேரியில் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ 6 லட்சம் செலவில் ஆசூரியம்மன் கோவிலில் கலையரங்கம் மற்றும் ரூ 7 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.அதனை தென்காசி எம்எல்ஏவும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கடையநல்லூர் வசந்தம் முத்துப்பாண்டியன், ஆலங்குளம் என்எச்எம் பாண்டியன், கீழப்பாவூர் அமல்ராஜ், சுரண்டை நகர செயலாளர் சக்திவேல், எபன் குணசீலன், குலையநேரி அருணாசலம், திருமலை,,  திருமால், பலவேசம், மகேந்திரன், பண்டாரம், ஆறுமுகம், முருகன், முருகையா, ஹரிராம், கண்ணன், தர்மராஜ், ராசையா, ராமையா, துரைப்பாண்டி, செல்வம், கூட்டுறவு சார்பதிவாளர் கோபிநாத், செயலாளர் ராதா, ராஜ்குமார், வேல்ச்சாமி, திருமலைக்கனி,  அம்மையாபுரம் முருகேசன், ஒன்றிய பிரதிநிதி நாராயணன், துரைச்சாமிபுரம் மாரியப்பன், சுரண்டை ஜவஹர் தங்கம், சங்கர், ராஜேஸ், ரெட்டைகுளம் ராமையா ப்ரியா கண்ணன், மூவே சந்திரன், வெள்ளைச்சாமி, அன்பழகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு ஊர் எல்லையில் இருந்து மேளதாளம், வான வேடிக்கை முழங்க சிறப்பான வரவேற்பு பொதுமக்களால் அளிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!