11 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் ரூ 2 கோடி மோசடி செய்தவருவாய் ஆய்வாளர் கைது

ராணிப்பேட்டையில் ரூ 2 கோடி மோசடி செய்தவருவாய் ஆய்வாளர் கைது

எழுதியவர்: mohan September 12, 2020, 3:04 pm

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை செங்கனாவரத்தை சேர்ந்த ராஜசேகர் (43) இவர் சிறப்பு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் 2014-ம் ஆண்டு இவர் நாவிதர் சங்கத்தை சேர்ந்தவர் வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 200க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 25 ஆயிரம் வாங்கி போலீ பட்டா தயார் செய்து கொடுத்து உள்ளார்.வாலாஜா, ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ 5 லட்சம் வரை வசூல் செய்து உள்ளார். மேலும் போலீஆவணங்கள் மூலம் வேலூர் கலெக்டர் ராமன் (முன்னாள்) போல் கையொழுத்து போட்டு அரசு முத்திரையிட்டு உள்ளார். இதுகுறித்து புகார் கள் ராணிப்பேட்டை ஆட்சியர் திவ்யதர்ஷிணிக்கு சென்றது. இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த ராஜசேகரை கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த குணசேகரை தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!