17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்போகியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தேர்போகியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

எழுதியவர்: mohan September 12, 2020, 2:59 pm

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட தேர்போகி பாமா ருக்மணி நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் 23 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பாமா ருக்மணி அம்பாள், நவநீதகிருஷ்ணன் சுவாமிகளுக்கு மலர்களால் சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. மலர்களால் அலங்கரித்த பாமா, ருக்மணி, நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அன்னதான நடந்தது இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளாக வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேர்போகி கிராம யாதவர் இளைஞர் சங்கம் செய்திருந்தது. கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பக்தர்கள் திரளாக சுவாமி வழிபாடு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!