17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; பிரதமர் மோடி உரை!

மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்; பிரதமர் மோடி உரை!

எழுதியவர்: Askar September 11, 2020, 1:23 pm

மதிப்பெண் சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சான்றிதழாகவும், குடும்பங்களுக்கு பெருமைக்குரிய சான்றிதழாகவும் உள்ளது. இதனை மாற்றவே புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ’21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி கொள்கை’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, பள்ளிகள் திறக்கப்பட்டதும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எந்த மொழியைக் கற்பிக்கவோ, படிக்கவோ தேசிய கல்விக் கொள்கை தடை செய்யவில்லை. அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, வேறு எந்த சர்வதேச மொழியாக இருந்தாலும் சரி, ஆனால், இந்திய மொழிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!