17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் உரிமை, தீவிரவாதம் குறித்து ஐநா.சபையில் இந்தியா அறிக்கை!

உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் உரிமை, தீவிரவாதம் குறித்து ஐநா.சபையில் இந்தியா அறிக்கை!

எழுதியவர்: Askar September 11, 2020, 10:58 am

உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் உரிமை, தீவிரவாதம் குறித்து ஐநா.சபையில் இந்தியா அறிக்கை!

உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தீவிரவாதமே காரணமாக இருக்கிறது என்றும் உலக நாடுகள் குழந்தைகளைப் பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என்றும் இந்தியா ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தியுள்ளது.

ஐநா.பாதுகாப்பு கவுன்சில் சார்பில் குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா தனது கருத்தை ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது.

தீவிரவாதத்தை தூண்டுவோர், அதற்கு நிதியுதவி அளிப்போர் , துணை நிற்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் கல்வியைக் கற்க முடியாத சூழல் நிலவுவதாகவும் , குழந்தைகளின் கல்வி உரிமையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!