17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் அரசு மருத்துவமனை தவ்ஹீத் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்…

நெல்லையில் அரசு மருத்துவமனை தவ்ஹீத் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்…

எழுதியவர்: mohan September 7, 2020, 5:39 pm

நெல்லையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் 61 பேர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்ஜிதுஸ் ஸலாம் கிளை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 06.09.20 காலை முதல் பிற்பகல் வரை மேலப்பாளையம் ஹாமீம்புரம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.இம்முகாமை காவல்துறை உதவி ஆணையாளர் பெரியசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் K.A.O.சாதிக் தலைமை தாங்கினார்.மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் மிகவும் ஆர்வமுடன் குருதி கொடையாளர்கள் 61 நபர்கள் இரத்ததானம் வழங்கினர். மேலும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் செய்யது மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் மாவட்ட துணைச் செயலாளர் ரோஸன் உட்பட கிளை நிர்வாகிகள் , கிளை மருத்துவ சேவை அணி செயலாளர் சேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!