17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

செங்கத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan September 6, 2020, 4:07 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தின் சார்பாக சிஐடியு, இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்j பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசு கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தரப்பு மக்களையும் சுகாதார பாதுகாப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர் நல சட்டம் திருத்தம் வேலையை 12 மணி நேரமாக அதிகரிப்பு உள்ளிட்ட, அவசர சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வானது சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது.

செய்தியால் செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!