17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை யங் இந்தியன்ஸ் சார்பில் பாராலிம்பிக் வீரர் ரஞ்சித்துக்கு பாராட்டு; ரூ.25,000 ஊக்க நிதி

மதுரை யங் இந்தியன்ஸ் சார்பில் பாராலிம்பிக் வீரர் ரஞ்சித்துக்கு பாராட்டு; ரூ.25,000 ஊக்க நிதி

எழுதியவர்: mohan September 5, 2020, 5:25 pm

யங் இந்தியன்ஸ் மதுரை (YI Madurai) அமைப்பு சார்பில், மத்திய அரசின் தியான் சந்த் விருது பெற்ற பாராலிம்பிக் வீரர் ரஞ்சித்திற்கு பாராட்டு விழா (05.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டுத் துறையில் அவரின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரூ.25,000 ரொக்க நிதி அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வானது zoom செயலி வாயிலாக அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரலை செய்யப்பட்டது. ஒய்ஐ மதுரை அமைப்பின் தலைவர் எல்.கல்யாண் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் பூர்ணிமா விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.நிகழ்வில் பேசிய ரஞ்சித், இளைஞர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் வகையில் துடிப்பான உரையை ஆற்றினார். ஒய்ஐ அமைப்பின் கற்றல் பிரிவு துணை பொறுப்பாளர் சுராஜ் வேல்சங்கர் நன்றி கூறினார். கற்றல் பிரிவு பொறுப்பாளர் எல்.ராமநாதன், யுவா பிரிவு பொறுப்பாளர் செங்கர்லால், தளிர் பிரிவு பொறுப்பாளர் ஷாகுல் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!