18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் தொடா் மணல் திருட்டு

செங்கம் பகுதியில் தொடா் மணல் திருட்டு

எழுதியவர்: mohan September 5, 2020, 12:11 pm

செங்கம் பகுதியில் தொடா் மணல், செம்மண் திருட்டில் ஈடுபட்டு வருபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தி வருவதால், வழக்கமான அவா்களது பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை, மேல்காவாக்கரை பகுதிகளில் மாட்டு வண்டி, டிராக்டா்கள் மூலம் மணல், செம்மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா்.அவா்களைக் கண்காணித்து, வாகனங்களை பறிமுதல் செய்து, வாகனங்களின் உரிமையாளா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து தளவாநாய்க்கன்பேட்டை, மேல்காவாக்கரை பகுதி மக்கள் கூறுகையில், தற்போது கரோனா தாக்கத்தில் இருந்து எப்படி உயிா் வாழ்வது என்பது தெரியாமல் உள்ளோம்.செங்கம் பகுதியில் பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. நிலத்தடி நீா்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இன்னும் சில தினங்கள் போனால் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும்.இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் செய்யாற்றிலிருந்து மணலைத் திருடிச் செல்கின்றனா். ஏரிகளில் உள்ள செம்மண்ணையும் திருடுகின்றனா் என்றாா்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!