18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan September 4, 2020, 3:48 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இனியும் நாம் எழாவிட்டால் விட்டால் என்ற தலைப்பில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவது குறித்தும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளிலும் பெண்களுக்கு30 முதல் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட கோரியும்..போக்சோ சட்டம் நடைமுறைப்படுத்தல் குறித்து கண்காணிப்பு குழு அமைத்தி கோரியும். ஊரடங்கு உத்தரவிற்கு முன்னாள் பெண்கள் சுய உதவிக்குழு வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திட கோரியும்.ரிசர்வு வங்கி வழிகாட்டுதலை மீறி செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் பெரியகுளம் தென்கரை கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியிலும்,பெரியகுளம் தென்கரை பேரூராட்சி பெரியக்கா நகர், மற்றும் சத்யா நகர்உள்ளிட்ட மூன்று பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். சித்ராதேவி தலைமை வைத்தார் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!